வத்திராயிருப்பு அருகே சென்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி தந்தை விபத்தில் பலி

மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.
வத்திராயிருப்பு அருகே சென்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி தந்தை விபத்தில் பலி
Published on

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகவனம்(வயது56). இவரது மனைவி முல்லை கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரதாப் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

தற்போது அவர் சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முருகவனம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவருடன் சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகவனம், பிச்சை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூமாபட்டி இமானுவேல் கீழத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகியோர் கீழே விழுந்தனர்.

இதில் முருகவனம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகவனம் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com