என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வடமதுரை அருகே கத்தரிகோலால் மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது
  X

  வடமதுரை அருகே கத்தரிகோலால் மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடியை மறப்பதற்காக ஈரோட்டில் உள்ள கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டி விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
  • அதன்படி கோவிலுக்கு சென்று கயிறு கட்டிய பிறகும் நேற்றுஇரவு கருப்புசாமி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள ரெட்டியபட்டி லக்கான்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி(39). டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கற்பகம்(30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

  இதனை மறப்பதற்காக ஈரோட்டில் உள்ள கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டி விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதன்படி கோவிலுக்கு சென்று கயிறு கட்டிய பிறகும் நேற்றுஇரவு கருப்புசாமி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

  இதனால் ஆத்திரமடைந்த கருப்புசாமி கத்தரிகோலால் தனது மனைவியின் கழுத்தில் பயங்கரமாக குத்தினார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் விரைந்து வந்து கற்பகத்தின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை கைது செய்யப்பட்டதால் அவரது 3 மகள்களும் ஆதரவின்றி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது அங்கிருந்த மக்களை மனம் உருக வைத்தது.

  Next Story
  ×