சரக்கு வாகனத்தை திருடிய சென்னை வாலிபர் கைது

வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சரக்கு வாகனத்தை திருடிய சென்னை வாலிபர் கைது
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் பழக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டது. இது குறித்து வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தத் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.பிரதீப் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சரக்கு வாகனத்தை திருடிய நபர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சேகர் மகன் மதன்ராஜ் (வயது28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன 10 மணி நேரத்தில் சரக்கு வாகனத்தை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.

மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் ஏழுமலை, மணிகண்டன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com