திண்டுக்கல் அருகே பைக் மீது கார்கள் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே பைக் மீது கார்கள் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Published on

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள போடிகாமன்வாடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). இவர் விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது உறவினரான வீரக்கல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று வத்தலக்குண்டு சாலை போடிகாமன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com