வங்கி ஊழியர்கள் 16, 17-ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
வங்கி வேலைநிறுத்தம்
வங்கி வேலைநிறுத்தம்
Published on

அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுமட்டும் இன்றி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com