கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் விருது- திருமாவளவன் அறிவிப்பு

காமராசர் கதிர் விருது-வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்காயிதேமில்லத் பிறை விருது-எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி
திருமாவளவன், சித்தராமையா
திருமாவளவன், சித்தராமையா
Published on

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டு தோறும் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

இந்த ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்குகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.

முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா,

ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதினை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்குவதில் பெருமைபடுகிறோம்.

விருது பெறுவோர் பட்டியல்

அம்பேத்கர் சுடர் விருது - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

பெரியார் ஒளி விருது-எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை

காமராசர் கதிர் விருது-வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்

அயோத்திதாசர் ஆதவன் விருது-இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பன்

காயிதேமில்லத் பிறை விருது-எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி

செம்மொழி ஞாயிறு விருது-தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன்

மார்க்ஸ் மாமணி விருது-மறைந்த எழுத்தாளர் ஜவஹர்

விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com