விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.திருபுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
Published on

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.மோகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் விதைச்சான்று அலுவலர் பிரபு, உதவி விதை அலுவலர் அழகு சேகர், சாலியமங்களம் உதவி வேளாண்மை அலுவலர் ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதில் திருபுவனம் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com