போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி பேசிய போது எடுத்த படம்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி பேசிய போது எடுத்த படம்.

பிரச்சினைகளை கண்டு மாணவிகள் தவறான முடிவு எடுக்கக்கூடாது- போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை

மாணவிகள் வெளியே சென்றால் நமக்கு நாமே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
Published on

அவினாசி:

அவினாசிபழனியப்பா மெட்ரிக் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது .நிகழ்ச்சிக்கு டாக்டர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, டாக்டர் சதீஸ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இன்ஸ்பெக்டர் சரவஸ்வதி பேசுகையில், மாணவர்களுக்கு படிப்பில் போட்டியிருக்கலாம். பொறாமை கூடாது. பேஸ்புக், சேர் பண்ணுவதால் அதை தவறாக பயன்படுத்த பழ வழிகள் உள்ளது. எனவே அதற்கு இடம் தரக்கூடாது. நேர்வழியை பின்பற்ற வேண்டும்.

மாணவிகள் பிரச்சினைகளை கண்டு தவறான முடிவுக்கு போகக்கூடாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், பிரச்சினையில் இருந்து விடுபட 181, 14417 என்றஉதவி எண்களில் கட்டணமின்றி தொடர்புகொள்ளலாம். இது ரகசியம் காக்கப்படும்.

மாணவிகள் வெளியே சென்றால் நமக்கு நாமே பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளியில் நடைபெறும் பெற்றோர் சந்திப்பு கூட்டங்களில் அவர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com