குடிபோதையில் இறந்த கொத்தனார் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய அவலம்

பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் இறந்த கொத்தனார் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய அவலம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார்.

அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com