எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

பெட்ரோல் குண்டை குடோனில் வீசி சென்றனர்.2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியை  சேர்ந்த 2 பேர் கைது
Published on

கோவை,

மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் ஆர்.எ ஸ்.எஸ். பிரமுகரான சச்சின் மற்றும் மதன்குமார் ஆகியோர் தனித்தனியாக பிளைவுட் கடை நடத்தி வருகின்றனர்.

இந்த கடைகளில் கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் கடையின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை குடோனில் வீசி சென்றனர்.

இதில் பெட்ரோல் குண்டு வெடித்து அங்கிருந்த பிளைவுட்டுகள் எரிந்து கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்த நாசர்அகமது(வயது30), ஷேக்பரித்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com