பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் பேட்டை முருகன், அனிச்சம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
பரமத்தி வேலூர் பேட்டை முருகன், அனிச்சம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் கோப்பணம்–பாளையம் பரமேஸ்வரர் ஆல யத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து செங்கலை கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன், கபிலர்–மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி, பரமத்தியை அடுத்த பிராந்த கத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவில், அய்யம்பாளையம் முருகன், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com