நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை

நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
நவராத்திரி கடைசி நாள் விஜய தசமியை முன்னிட்டு வேலூர் பேட்டை பகவதி அம்மன், கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
நவராத்திரி கடைசி நாள் விஜய தசமியை முன்னிட்டு வேலூர் பேட்டை பகவதி அம்மன், கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில், கொப்பளம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

விஜயதசமி நாளை முன்னிட்டு ப‌.வேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com