அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Published on

சிவகங்கை

சிவகங்கை பஸ் நிலையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் முதல்கட்ட நிகழ்வு நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதில் அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்களான காற்றோட்டமான வகுப்ப றைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி, தமிழ் வழி பிரிவுகளுடன் ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதும் விளக்கப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com