பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கேடயம்

முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 5-வது கல்லூரி நிறுவன தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு மன்னார்குடி கீர்த்தி கிளினிக் டாக்டர். ரவீந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் விக்டோரியா முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் கழக துணைத்தலைவருமான சுகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மேல்நிலை படிக்கும் மாணவர்கள் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டனர். மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோ க்கிய ராஜ், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர். விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com