சங்கராபுரம் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு

பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சங்கராபுரம் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரம், பூட்டை சாலை, கள்ளக்குறிச்சி மெயின் சாலை, திருக்கோவிலூர் மெயின் ரோடு, அரசம்பட்டு, வடசெட்டியந்தல், மூரார்பாளையம் ஆகிய இடங்களில் தீபாவளியை முன்னிட்டு அனுமதி பெற்று அமைந்துள்ள பட்டாசு கடைகளையும், அது அமைந்துள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com