தச்சநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா தச்சநல்லூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறுவர்- சிறுமிகளின் சிலம்பாட்டம், வாள் சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்த போது எடுத்தபடம்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்த போது எடுத்தபடம்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா தச்சநல்லூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பின்னர் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் சிறுவர்- சிறுமிகளின் சிலம்பாட்டம், வாள் சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அவற்றை அனைவரும் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியில் 2-வது வார்டு வட்ட செயலாளர் பாக்கியராஜ், 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகையா பாண்டியன், வட்ட செயலாளர் பாறையடி மணி, பழைய பேட்டை கணேஷ், நிர்வாகிகள் நெடுஞ்செழியன், வாசு, தளவாய், தச்சை பாலசுப்பிரமணி, சண்முகையாபாண்டியன், தச்சை மண்டல மேஸ்திரி ஜானகிராமன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகையா பாண்டியன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com