

சேலம்:
சேலம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 43). தொழிலாளியான இவர் நேற்று வீட்டில் உள்ள ஏணியில் ஏறி மாடிக்கு செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். சம்பவம் குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.