சேலத்தில் மாடியில் இருந்து விழுந்து பொம்மை வியாபாரி பலி

சேலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து பொம்மை வியாபாரி பலியானார்
.
.
Published on

சேலம்:

சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காதர்பாஷா (வயது 38). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில்  சாலையோரத்தில்  பொம்மை வியாபாரம்  செய்து வந்தார்.

நேற்று வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற இவர் வீட்டின்  3-வது மாடியில் இருந்து மது குடித்ததாக   கூறப்படுகிறது. அப்போது  எதிர் பாராத விதமாக  தவறி  கீழே விழுந்தார்.

இதில்   அவருக்குபின்  தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு   சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக  இறந்தார்.  இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து கிச்சிப்பாளை யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com