போதையில் பைக் ஓட்டிய போலீஸ்காரர்- உயர் அதிகாரிகள் விசாரணை

குடி போதையில் தள்ளாடிய படி பைக் ஓட்டிய போலீஸ்காரரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிபவர் முத்தமிழ் (வயது 28),  இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு ஹெல்மட் அணியாமல் பிரபாத்தில் இருந்து ஜவுளிக்கடை பஸ்டாப் வரை பைக்கை தாறு மாறாக ஓட்டி சென்றார். 

அப்போது ஒரு தம்பதி உள்பட 4 பேரை இடித்து தள்ளினார். இதற்கிடையே குகை பஸ் டாப்பில் பைக்கை நிறுத்தி விட்டு வாகன ஓட்டிகள் , பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டார். 

தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் முத்தமிழை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் முத்தமிழ் போதையில் வாகனம் ஓட்டியது , மக்களிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com