தி.மு.க.-முஸ்லிம் லீக் கட்சியினர் திடீர் மோதல்

சேலம் கோட்டையில் தி.மு.க.-முஸ்லிம் லீக் கட்சியினர் திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறியலில் ஈடுபட்ட முஸ்லீம் லீக் கட்சியினர்.
மறியலில் ஈடுபட்ட முஸ்லீம் லீக் கட்சியினர்.
Published on

சேலம்: 

சேலம் கோட்டையில் ஹபீப் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பெரும்பாலான சாலைகளில் ஜல்லிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் சையத் மூசா தலைமையில் கட்சியினர் சாக்கடை கால்வாய், குடிநீர் பைப் லைன்கள் அமைத்த பின்னர் சாலையை சீரமைக்க கேட்டு திருவள்ளுவர் சிலை அருகே மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு ஏற்படாததால் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க சென்றனர். தொடர்ந்து கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள சாலைக்கு வந்த கவுன்சிலர் சையத் மூஸ்£ மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

ஆனால் அவர் மாநகராட்சி அலுவல கத்திற்கு வருமாறு அவர் களுக்கு அழைப்பு விடுத்தார். இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த இப்ராஹிம் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

தகவல் அறிந்த உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com