சேலத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்த கடைக்காரர் கைது

சேலத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் இரும்பாலை  மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியில் நேற்று இரும்பாலை இன்ஸ்பெக்டர் ஜெய்சில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது மஜ்ராகொல்லப்பட்டி பகுதியில் குணசேகரன் (வயது 39) என்பவர் அவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக தகவல் வந்தது.

இதையடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து குணசேகரனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com