ஆரியபாளையம் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு

ஆரியபாளையம் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

ஆத்தூர்: 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஆரியபாளையம் அண்ணா நகர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் படி,  பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேவகி என்பவரைபள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக  தேர்ந்தெடுத்தனர். 

தலைமையாசிரியர், ஆசிரியர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.    மாவட்டத்திலிருந்து பார்வையாளராக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது. 

தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 இவர்கள் மூலம் பள்ளி வளர்ச்சி, மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு வசதி போன்றவைகள் செய்யப்பட இருக்கின்றன. முடிவில்  ஆசிரியர் கவுரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com