டிரான்ஸ்பார்மரில் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் மின் ஊழியர்கள்

சேலம் 33-வது வார்டில் கழிவுநீரோடை பணி மெத்தனம் காரணமாக டிரான்ஸ்பார்மரில் உயிரை பணயம் வைத்து மின் ஊழியர்கள் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் நின்று வேலை செய்யும் மின் ஊழியர்கள்.
ஆபத்தான நிலையில் நின்று வேலை செய்யும் மின் ஊழியர்கள்.
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சி 33-வது வார்டு லட்சுமி நகரில் முத்தவல்லி முகமது யாகூப் தெரு உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாறுகால் கழிவுநீர் ஓடை பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியின்போது அருகிலுள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்டது. 

இதனால் அந்த வழியாக செல்லும் தண்ணீர் டிரான்ஸ்பார்மருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கிறது. மேலும் தோண்டப்பட்ட பள்ளத்தை இன்னும் சரிசெய்யாமல் போட்டுள்ளதால் மின் ஊழியர்கள் மின்மாற்றியை இயக்குவதற்கு கடந்துசெல்ல சிரமப்படுகின்றனர்.

எந்த ஒரு பிடிதரமும் இல்லாமல் ஆபத்தான நிலையில் நின்றவாறு பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மருக்கும், பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், கழிவுநீரோடை பணியை விரைந்து முடிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com