ஏத்தாப்பூர் பள்ளியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி ஏன்?

ஏத்தாப்பூர் பள்ளியில் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.
.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கான ஏகலைவா அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் ஆத்தூர் கடம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி நேற்று மதியம் 2 மணி அளவில் பள்ளி விடுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அந்த மாணவி மயங்கி கிடந்ததை கண்ட சக மாணவிகள் மற்றும் விடுதியுடன் வார்டன் சிவகாமி ஆகியோர் அந்த மாணவியை பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன் பின்னர் அந்த மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பள்ளி மாணவி ஒருவர் பள்ளியிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாணவி எதற்காக விஷம் குடித்தார்?

பள்ளி நிர்வாகம் ஏதேனும் மன அழுத்தம் கொடுத்தார்களா? அல்லது பெற்றோர் மன அழுத்தம் கொடுத்து அதன் காரணமாக மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com