

சேலம்:
சேலம் அழகாபுரம் சோனா நகரை சேர்ந்தவர் ராம் பிரசாத். இவரது மனைவி இலக்கியா (வயது 28). கடந்த மார்ச் மாதம் இவர் தனது செல்போனில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்வது குறித்து கூகுள் மூலம் தேடியுள்ளார்.
அப்போது ஒரு லிங்குற்குள் சென்று தனது விபரங்களை பதிவு செய்து ஆன்லைனில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். மறுமுனையில் இருந்து பதில் வந்ததும் முதலில் ரூ. 200 முதலீடு செய்துள்ளார். அதற்கு கமிஷனாக ரூ.187 இலக்கியாவின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மூலம் பல தவணைகளாக முதலீடு செய்துள்ளார். இதன்படி மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரூபாய் செலுத்தி இருந்தார். ஆனால் அதற்கான கமிஷன் வரவில்லை.
அனுப்பிய பணத்தையும் எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த இலக்கியா சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.