சங்ககிரியில் கன மழை

சங்ககிரியில் கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது .அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. 

குறிப்பாக சங்ககிரியில் கனமழை பெய்தது. நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர் .கோடைக்காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கரிய கோவிலில் 2 மில்லிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com