கிணற்றில் தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பலி

ஓமலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பலியானார்.
.
.
Published on

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 33). இவர் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவர் மூக்கனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார். 

இதுகுறித்து காடையாம்பட்டி தீயணைப்பு, மீட்பு படையினர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இறங்கி கயிறு கட்டி கதிர்வேலை பிணமாக மீட்டனர். 

இந்தசம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து கதிர்வேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com