அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

சேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
.
.
Published on

சேலம்:

சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக அரியானூர் அருகே பை-பாஸ் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. 

இதில் படுகாயமடைந்த துரைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரைராஜ் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com