அரசு பள்ளி ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

ஓமலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு கொலை மிரட்டல் போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பு புகார்
.
.
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செல்லபில்லைகுட்டை கிராமம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள மொரட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பரபரப்பு புகார்

இவர் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.  அந்த புகாரில், நான் செல்லபில்லைகுட்டை மேட்டுக்காடு பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறேன்.  இங்கு 40 ஆடுகள், 5 மாடுகளை எனது மனைவி பராமரித்து வருகிறார். 

இந்த நிலையில் செல்லப்–பிள்ளை குட்டை  பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சித்தையன் குடும்பத்தினர்  என்னிடம் தகராறு செய்து எனது சொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

 மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  அவர்கள் மீது நான் பலமுறை  ஓமலூர் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே  உயர் அதிகாரிகள் அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.அரசு பள்ளி ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில்   பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com