நாமக்கல் மாவட்டங்களில் 658 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டங்களில் மேலும் 658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 705  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 658 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. 

அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 363 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 427 பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர். 

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த எளையாம்பாளையத்தை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 525 ஆக  ஆனது. 

இதுவரை 58,055 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 4,783 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com