ரூ.1.50 கோடி நிலத்தை அபரிக்க முயற்சி

ரூ.1.50 கோடி நிலத்தை அபரிக்க முயன்றதாக தி.மு.க. பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

சேலம் சின்னதிருப்பதி அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் சையத் அலாவூதீன். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தம்மம்பட்டி அருகே கூடமலையில் கடந்த 2020&ம் ஆண்டு தி.மு.க. நிர்வாகி ஒருவர் மூலம் 14 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அதற்கு அவருக்கு ரூ.1 லட்சம் கமிஷன் கொடுத்தேன்.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட போது தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கேட்டார். 

நான் இல்லை என்று கூறி விட்டேன். தற்போது அவர், தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். எனவே அவர் வாங்கி கொடுத்த நிலத்தில் 3 ஏக்கர் தரவேண்டும். இல்லையென்றால் ரூ.50 லட்சம் தர வேண்டும் எனக்கூறி எனக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பி லான அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். 

இது குறித்து தம்மம்பட்டி போலீசில் புகார் செய்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com