ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை சாவு

தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை சாவு
.
.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 26). இவருடைய மனைவி சந்தியா (20). இவர்களுக்கு தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் மயக்க நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து தாரமங்கலம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com