கருப்பூர் அருகே வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

வல்லரசு (வயது 22). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
கருப்பூர் அருகே வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
Published on

சேலம் கருப்பூர் தேக்கம்பட்டி தொகுதி சேர்ந்தவன் சண்முகம் இவரது மகன் வல்லரசு (வயது 22). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் மது குடிக்கிறாயே என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மன வேதனை அடைந்த வல்லரசு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com