மின்சாரம் தாக்கி வயர் மேன் பலி

கண்ணனுக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கண்ணன்
கண்ணன்
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவருக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கண்ணன் சிறுவாச்சூர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் பழுது நீக்கும் ஊழியராக (வயர் மேன்) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கண்ணன் வழக்கம்போல் நேற்று மாலை சிறுவாச்சூர் ராஜீவ் நகரில் உள்ள மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வயர்மேன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com