மயங்கி விழுந்து முதியவர் சாவு

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயங்கி விழுந்து முதியவர் சாவு
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com