வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கைக்கு வலைவீச்சு

குமார் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கைக்கு வலைவீச்சு
Published on

சேலம்:

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் குமார்(34). இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது குமாரி டம் திருநங்கை ஒருவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஆட்டோவில் 5 ரோடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே குமாரிடம் இருந்த செல்போனிலிருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு கூகுள்பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அனுப்ப வைத்துள்ளார்.

பின்னர் குமாரிடம் தகராறு செய்து ஆட்டோவில் இருந்து குமாரை கீழே இறக்கி விட்டு திருநங்கை தப்பி சென்று விட்டார். இது குறித்து குமார் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com