இருசக்கர வாகனம் மோதி மனநலம் பாதித்தவர் பலி

பெட்ரோல் பங்க் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இருசக்கர வாகனம் மோதி மனநலம் பாதித்தவர் பலி
Published on

சேலம்:

சேலம் இரும்பாலை போலீஸ் சரகம் கணபதி பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் ராமசாமி என மருத்துவமனை பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். இதில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com