மத்தூர் இயற்கை வேளாண் பண்ணையில் தோட்டக்கலை மாணவிகளின் ஊரக பணி பயிற்சி

ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.
இயற்கை பண்ணை விவசாயம் குறித்து மாணவிகள் பயிற்சி பெற்றபோது எடுத்த படம்.
இயற்கை பண்ணை விவசாயம் குறித்து மாணவிகள் பயிற்சி பெற்றபோது எடுத்த படம்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இக்குழுவினர், வாழப்பாடி அருகே மத்தூரில் விவசாயிகள் பழனிசாமி, சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.

இயற்கை முறையில் கரும்பு, பப்பாளி, வாழை, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, வெங்காயம் போன்ற பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். இயற்கை முறை வேளாண்மை , ஊடுபயிர் மேலாண்மை, பல அடுக்கு முறை விவசாயம், இயற்கை வளர்ச்சியூக்கிகள், பூச்சி விரட்டிகள் குறித்தும் அனுபவ பயிற்சி பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com