உடன்குடி பேரூராட்சியில் ரூ.52 லட்சத்தில் சாலை பணி

எம். ஜி.ஆர். நகர், கிறிஸ்டியாநகரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றதுசாலை பணிகளை உடன்குடி பேருராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தார்.
உடன்குடி பேரூராட்சியில் ரூ.52 லட்சத்தில் சாலை பணி
Published on

உடன்குடி:

கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் உடன்குடி பேரூராட்சி 1-வது வார்டு எம். ஜி.ஆர். நகரில் ரூ. 25.60 லட்சம் மதிப்பிலும், உடன்குடி பேருராட்சி 10- வது வார்டு கிறிஸ்டியாநகரம் தெற்கு தெருவில் ரூ. 27 லட்சம் மதிப்பிலும் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உடன்குடி பேருராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் உடன்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி பிரபா, இளநிலை பொறியாளர் விஜயகுமார், உடன்குடி பேரூ ராட்சி 10-வது வார்டு கவுன்சிலரும், பேருராட்சி நிலை க்குழு உறுப்பினருமான ஜான்பாஸ்கர், 1-வது வார்டு கவுன்சிலர் சபீனா காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com