சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

ராமநாதபுரம் நகராட்சியில் சுயேச்சைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ந் தேதி நடக்கிறது. வேட்புமனு திரும்பப்பெறுதல் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நடந்தன. 

வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவோர், வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் மட்டுமே நகராட்சி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மனுக்களை திரும்பப் பெறுதல் நேற்று முடிந்தது.

பின்னர் நகராட்சியின் 33 வார்டுகளில் மனு தாக்கல் செய்து திரும்பப்பெறாத சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது நகராட்சி அலுவலகத்துக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் வந்தார். 

அவரை ஆணையரும், நகராட்சி தேர்தல் அலுவலருமான சந்திரா வரவேற்றார். கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்ட இடங்கள், போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com