மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்முகவேல்
சண்முகவேல்
Published on

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 60). விவசாயியான இவர் வயல்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென இடி-மின்னலுன் மழை பெய்தது.

அப்போது மின்னல் தாக்கி சண்முகவேல் அதே இடத்தில் பலியானார். இது குறித்து இளஞ்செம்பூர் போலீசில் புகார் செய்தனர். இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com