சுந்தரபாண்டியபுரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் நெல் களம் அமைக்கும் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரபாண்டியபுரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் சுந்தரபாண்டியபுரம் பகுதி விவசாயிகள் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையான நெல் களம் அமைக்கும் பணியானது ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் நெல் களம் அமைக்கும் கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கட்டிடத்திற்கான தூண்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. அதில் 2 துண்டுகளாக ஒன்றோடு ஒன்று சரியாக இணைக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டிடம் தரமாக இருக்காது என்றும், சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் எழுந்துள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com