ஆத்தூர் அருகே கனமழை ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலையை ஒட்டி முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. பாதுகாப்பு கருதி, ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்யவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
ஆத்தூர் அருகே கனமழை ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலையை ஒட்டி முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலாத் தலமாக பராமரித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் முட்டல் ஏரியில் படகு சவாரி செய்வதும், நீர் வீழ்ச்சியில் குளித்து செல்வதும் வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி, ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்யவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com