குடியரசு தினவிழாவையொட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா மற்றும் சாரணர் இயக்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தாமரை குழுமத்தின் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக கும்பகோணம் கல்வி மாவட்ட சாரண இயக்க செயலாளர் சுவாமிநாதன் தமிழ் ஆசிரியர் நகர மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளி முதல்வர் விஜயா ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளி மாணவிகள் அணியின் சுற்றுச்சூழல் துணை செயலாளர் மோகனப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் பள்ளி முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

சிறப்பு விருந்தினர் சாரணர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்தனர்.

விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி மாணவர்கள் அணியின் சுற்றுச்சூழல் செயலாளர் செல்வன் லோகித் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com