தச்சநல்லூரில் தனியார் பஸ் கண்டக்டர் மாயம்

முத்துக்குமார் தனியார் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். ஓட்டலுக்கு சாப்பிட செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு முத்துக்குமார் சென்றுள்ளார்.
தச்சநல்லூரில் தனியார் பஸ் கண்டக்டர் மாயம்
Published on

நெல்லை:

நெல்லை தச்சநல்லூரை அடுத்த கீழக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவருக்கு கவுதமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். முத்துக்குமார் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் ஓட்டலுக்கு சாப்பிட செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக நேற்று கவுதமி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com