பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ வெளியிட்டவரை உடனடியாக கைது செய்யவேண்டும்.பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பா.ஜ.க.வினர்.
போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பா.ஜ.க.வினர்.
Published on

பரமத்திவேலூர்:

சமூக ஊடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ வெளியிட்ட விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், ஒழிந்தியாம்பட்டைச் சேர்ந்த சக்திவேல் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு தலைவர் சுபாஷ் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

அப்போது பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேலு, மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரபு, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் மற்றும் பா.ஜ.க வின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com