

சிவகிரி:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில் மின் சிக்கன வார விழா நடைபெற்றது.
விழாவில் நகர்ப்புற உதவி மின் பொறியாளர் பவாணி சங்கரி, கணக்கீட்டு ஆய்வாளர் காளிதாஸ், வணிக ஆய்வாளர் திருமுருகன் ஆகியோர் மின் சிக்கனம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கவிதை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். இதில் தலைமை ஆசிரியர் மாரியப்பன், ஆசிரியர்கள் , மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.