திருச்செந்தூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு யாகம்

சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சாமி தரிசனம்.துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினார்.
திருச்செந்தூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு யாகம்
Published on

திருச்செந்தூர்:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

அப்போது கோவிலில் உள்ள துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினர். தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், குருபகவான் சன்னதியில் வழிபட்டும், சத்ரு சம்ஹார யாகம் வளர்த்தும் சுவாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியின் போது பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் முருகன், நகரத் தலைவர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com