ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.
நன்செய் இடையாறு மகா மாரியம்மன், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன், காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன்  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
நன்செய் இடையாறு மகா மாரியம்மன், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன், காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன், பரமத்தி அங்காள பர மேஸ்வரி அம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், பொத்த னூர் மாரியம்மன், கொந்த

ளம் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பச்சையம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com