செஞ்சி அருகே சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர்:போக்சோவில் கைது

இவர் ஆத்திப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 6-வது படித்து வருகிறார். செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
செஞ்சி அருகே சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர்:போக்சோவில் கைது
Published on

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆத்திப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 6-வது படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி அங்குள்ள புளியமரத்தடியில் உட்கார்ந்து இருந்தபோது கொழப்பலூரை சேர்ந்த பொன்னுசாமி வயது 90 என்ற முதியவர் சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்துவிட்டு சிறுமியின் பெற்றோரிடம் சொல்ல சிறுமியின் தாயார் இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மேற்படி முதியவர் பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com